ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் மின்வெட்டு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது டுவிட்டர் பக்கத்தில் “சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக அதற்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “தற்போது நகர் முழுவதும் மின்சாரத் துறையின் பணிகள் நடந்துகொண்டு வருகிறது. இதனால் குறைந்தபட்ச இடையூறுகளை தவிர்க்க முடியவில்லை. இருப்பினும் உங்கள் பகுதியில் மின்வெட்டு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். உங்களுக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார். மின்சார துறை அமைச்சரின் இந்த உடனடி பதில் அவரது நன்மதிப்பை உயர்த்தியுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.