ஓசி பீடிக்காக கொலை!

Filed under: தமிழகம் |

ஓசி பீடி கொடுக்காத ஆத்திரத்தில் கட்டிட தொழிலாளி ஒருவர் கொலை செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் ஏஞ்சல் நகரைச் சேர்ந்த 65 வயது கட்டிட வேலை செய்பவர் நடைமேடையில் உறங்கியுள்ளார். அவரிடம் அதே பகுதியில் வேலை பார்க்கும் ஒருவர் ஓசி பீடி கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் ஓசி பீடி கொடுக்கவில்லை என்பதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஓசி பீடி கொடுக்காத ஆத்திரத்தில் தன்னிடம் சண்டை போட்ட கட்டிட வேலை செய்பவரை தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டு உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பிளாட்பாரத்தில் உறங்கும் இருவருக்கும் இடையே நடந்த தகராறில் தான் கொலை நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து தலைமறைவாகியுள்ள கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.