ஓடிடியில் “தி லெஜண்ட்” ரிலீஸ்!

Filed under: சினிமா |

கடந்த ஆண்டு சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த “தி லெஜன்ட்” திரைப்படம் வெளியானது. படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை.

இத்திரைப்படம் கடந்த சில மாதங்களாக ஓடிடியில் ரிலீசாகவிருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது லெஜன்ட் சரவணா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்றே ஓடிடியில் வெளியாகும் என அறிவித்துள்ளார். இன்றும் அதிகம் 12:30 மணி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ வெளியாகும் என்றும் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஹாட்ஸ்டாரில் இந்த படத்தை பார்க்கலாம் என்றும் லெஜன்ட் சரவணன் அறிவித்துள்ளார்.