ஓடிடியில் வியாபாரம் ஆகாத அருண் விஜய்யின் திரைப்படம்!

Filed under: சினிமா |

“மிஷன் 1” திரைப்படத்தில் அருண் விஜய் கடந்தண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்து முடித்தார். இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் பெரும்பகுதி நடந்தது. அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய வேடங்களில் நடிக்க படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை லைகா வாங்கி வெளியிடுவதாக அறிவித்தது.

பொங்கல் பண்டிகைக்கு இத்திரைப்படம் ரிலீசானது. “கேப்டன் மில்லர்” மற்றும் “அயலான்” ஆகிய படங்களுக்கு நடுவே ரிலீசானாலும் இந்த படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் ஒரு குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் இந்த படம் இன்னும் ஓடிடியில் ரிலீசாகவில்லை. தமிழ் சினிமாவில் ரிலீசாகும் படங்கள் 28 நாட்களில் ஓடிடியில் ரிலீசாகிவிடும். ஆனால் இத்திரைப்படம் 45 நாட்கள் ஆகியும் இன்னும் எந்த ஓடிடியில் ரிலீசாகவில்லை. இதனால் இந்த படம் இன்னும் எந்த ஓடிடியிலும் வியாபாரம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதே போல ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள “லால் சலாம்” திரைப்படத்தின் ஓடிடி ரிலீசும் இன்னும் முடியவில்லை என்று கூறப்படுகிறது.