“ஓபன்ஹெய்மர்” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Filed under: சினிமா |

“ஓபன்ஹெய்மர்” திரைப்படம் ஹாலிவுட்டில் பிரபல இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படைப்பு. இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் ஹாலிவுட்டில் இன்செப்ஷன், டன்கிர்க், டார்க் நைட் உட்பட பிரபலமான பல படங்களை இயக்கியவர். கடந்த ஆண்டில் இவர் இயக்கத்தில் வெளியான டெனட் திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. தனது திரைக்கதை அமைப்பில் பார்வையாளர்களை குழப்பும் வகையில் பல அம்சங்களை இணைக்கும் உத்தியை கையாள்பவர் கிறிஸ்டபர் நோலன்.
தற்போது கிறிஸ்டோபர் நோலன் அணுகுண்டு பரிசோதனையை மையப்படுத்திய ஓபன்ஹெய்மர் ப்ராஜெக்டை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஓபன்ஹெய்மர் என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிலியன் மர்பி, ராபர்ட் டோனி ஆகிய பலர் நடித்துள்ளனர். இப்படம் எப்போது வெளியாகும் என பலரும் காத்திருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடம் கழித்து ஜூலை 21, 2023ல் இத்திரைப்படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.