ஓபிஎஸ்ஸின் உறுதி!

Filed under: அரசியல்,தமிழகம் |

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக தங்கள் வசமாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகம் முழுதும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில், முன்னாள் முதலமைச்சரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான ஒ.பன்னிர்செல்வம் தனது குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், “பத்து ஆண்டுகளாக நல்லாட்சி புரிந்த பாரத பிரதமர் நரேந்திர மோடிதான் மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்று கருத்து கணிப்புகள் வருகின்றன. ராமநாதபுரம் தொகுதியில் எனக்கு வெற்றி உறுதி. இத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எங்கு உள்ளார் என்று தெரியவில்லை” என்று கூறியவரிடம், ‘2024 தேர்தல் முடிவில் அதிமுக ஓபிஎஸ், டிடிவி தினகரன் கைக்கு வரும்’ என்ற அண்ணாமலையின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “தேர்தலுக்குப் பிறகு நிச்சயமாக அதிமுக தங்கள் வசமாகும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.