சென்னை உயர்நீதிமன்றம் அதிமக பொதுக்குழு கூட்டம் செல்லாது, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது, அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதும் செல்லாது என்று வெளியிட்ட தீர்ப்பையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இத்தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பினரிடம் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. சாலைகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். மேலும் தர்மம் வென்றது… நீதி வென்றது இனிமேல் எல்லாமே எங்களுக்கு தான் வெற்றி என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் ராஜ துரோகிக்கும், ராஜ விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வெளி காட்டி உள்ளது என்றும் எங்கள் அய்யா ஓபிஎஸ் ராஜ விசுவாசி என்றும் எடப்பாடி பழனிச்சாமி ராஜ துரோகி என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.