“கங்குவா” திரைப்படம் இரண்டு பாகங்களா?

Filed under: சினிமா |

சிறுத்தை சிவா சூர்யா 42 படத்தை இயக்கி வருகிறார். இக்கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் மோஷன் டீசர் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் சிறுத்தை சிவா. இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டில் “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது, சூர்யா நடிக்கும் முதல் 3டி தொழில்நுட்பபடம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் “கங்குவா” டைட்டில் டீசரை ஸ்டூடியோ கிரீன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்போது பரவலான டிரெண்டாக இருக்கும் இரண்டு பாகங்களாக படத்தை ரிலீஸ் செய்வதை போல, படத்தையும் இரண்டு பாகங்களாக உருவாக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.