டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மும்முனை போட்டி உள்ளது.
மூன்று கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாக்குறுதிகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு முதுநிலை படிப்பு வரை இலவசக் கல்வி என்ற வாக்குறுதியை காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் அளித்துள்ளன. 300 இலவச மின்சாரம் என்ற வாக்குறுதியை காங்கிரஸ், ஆம் ஆத்மி தங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. மேலும் பழங்குடியின மக்களுக்கு அரசியலமைப்பு மற்றும் பஞ்சாயத்து சட்டம் அட்டவணை 5 செயல்படுத்துவதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. 10 லட்சம் வரை இலவச மருத்துவம் என்ற வாக்குறுதியை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அளித்துள்ளன. மூன்று கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி வாக்குறுதிகள் அளித்துள்ளதால் குஜராத் மக்கள் கடும் குழப்பத்தில் இருக்கின்றனர்.