போலியான பெயர்கள் மூலம் நிதியைப் பெற்று வந்ததாக ஆடிட்டிங்கில் கண்டறியப்பட்ட 266-ம் மேற்பட்ட என்.ஜி.ஓ.க்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தியது.
முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் நடத்தப்படும் NGO க்களின் தொண்டு நிறுவனங்கள் போலியாக செயல்பட்டு முறைகேடாக அரசு வழங்கும் நிதியைப் பயன்படுத்துவதாக வந்த புகார்களை அடுத்து முதல் முறையாக NGO க்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆயிரத்து 276 NGO க்களுக்கு மத்திய அரசு தலா ரூ. 25 லட்சம் வழங்கி வருகிறது. இந்நிலையில் 266-ம் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் ஆடிட்டிங்கில் முறைகேடு செய்ததாகவும் விதிமுறைகளை மீறியதாகவும் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.