கணவர் பதவிக்கு மனைவி நியமனம்!

Filed under: அரசியல்,இந்தியா |

கேரள மாநில தலைமைச் செயலாளர் பணியில் இருந்து ஓய்வு பெறும் அதே நாளில் அந்த பதவிக்கு அவருடைய மனைவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் டாக்டர் வேணு என்பவர் ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருடைய மனைவி சாரதா முரளிதரன் அடுத்த தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். கணவர் ஓய்வு பெறும் அதே தலைமைச் செயலாளர் பதவியில் மனைவி உட்கார இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கணவர் வகித்த பதவி பதவியை மனைவி வகிப்பது என்பது மிகவும் அரிதான செய்தி. இம்மாதம் 31ம் தேதி தலைமைச் செயலாளராக வீட்டில் இருந்து காரில் வேணு புறப்பட்டு செல்வார், ஆனால் அதே காரில் தலைமைச் செயலாளராக வேணுவின் மனைவி சாரதா வீட்டில் இருந்து தலைமை செயலக அலுவலகத்துக்கு செல்வார்.