கதாநாயகனான பிரேம்ஜி!

Filed under: சினிமா |

இயக்குனர் சுரேஷ் சங்கையா 2017ம் ஆண்டு வெளியான “ஒரு கிடாயின் கருணை மனு” என்னும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர். இத்திரைப்படத்துக்குப் பிறகு அவர் நடிகர் செந்திலைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீசாகவில்லை.

அதற்கடுத்து அவர் பிரேம்ஜி அமரனைக் கதாநாயகனாக வைத்து அவர் இயக்கியுள்ள “சத்யசோதனை” படத்தின் டிரெயிலர் சிலமாதங்களுக்கு முன்னர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த டிரையிலரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டு இருந்ததால் கூடுதல் கவனம் கிடைத்தது. ஒரு காவல்நிலையத்துக்கு புகார் கொடுக்க செல்லும் பிரேம்ஜி அமரன் என்ன வகையிலான சிக்கல்களில் எல்லாம் சிக்கிக் கொள்கிறார் என்பது பற்றி நகைச்சுவைக் காட்சிகளோடு டிரெயிலர் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 21ம் தேதி சத்தியசோதனை திரைப்படம் ரிலீசாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.