‘கனெக்ட்’ படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியருக்கு வாடகைதாய் மூலம் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இது தொடர்பான சர்ச்சைகள் இப்போது ஓய்ந்துள்ள நிலையில் குழந்தைகளோடு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து இருவரும் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

தன் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா “கனெக்ட்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை “மாயா” மற்றும் “கேம் ஓவர்” ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்குகிறார். இப்போது “கனெக்ட்” படத்தின் வேலைகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.