கமலஹாசனின் “விக்ரம்” திரைப்படம் 100வது நாளை எட்டியது!

Filed under: சினிமா |

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து இவ்வாண்டின் மிகப்பெரிய திரைப்படம் “விக்ரம்”

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்த படம் “விக்ரம்.” இத்திரைப்படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3ம் தேதி இப்படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இத்திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 500 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன. இவ்வாண்டில் “ஆர்ஆர்ஆர்” மற்றும் “கேஜிஎப் 2” ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றிப் படமாக “விக்ரம்” கருதப்படுகிறது. இந்நிலையில் இன்று “விக்ரம்” திரைப்படம் 100வது நாளைக் கடந்துள்ளது. இது சம்மந்தமாக ஒரு சிறப்புப் பதிவை கமல்ஹாசன் வெளியிட்டு “தலைமுறைகள் கடந்தும் என்னை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி” என கூறியுள்ளார்.