கமலஹாசன் வினோத் படத்தில் நடிக்கிறாரா?

Filed under: சினிமா |

கமலஹாசன் ஹெச் வினோத் இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடித்த “துணிவு” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடிப்பிலும் ஒரு படத்தையும் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கமல் “இந்தியன் 2” திரைப்படத்தை முடித்ததும் அடுத்து உடனடியாக வினோத் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கமலஹாசன் வினோத், படத்தில் நடிப்பது உறுதியில்லை என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள்தான் இப்போது நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இத்தகவலை கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும், பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் தன்னுடைய யுடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.