அஜீத்தின் ஆஸ்தான இயக்குனரானார் ஹெச் வினோத். இவர் “சதுரங்க வேட்டை” மற்றும் “தீரன்” ஆகிய படங்களை இயக்கியவர். அஜீத்தை வைத்து “நேர்கொண்ட பார்வை,” “வலிமை” மற்றும் “துணிவு” என மூன்று படங்களை இயக்கினார்.
இப்போது வினோத், கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் புதிய படத்துக்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். படத்தின் ஷூட்டிங் குறைந்த நாட்களில் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்துக்காக கமல்ஹாசன் 45 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமலை விட அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.