கமல், மணிரத்னம் திரைப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் என்ன?

Filed under: சினிமா |

“பொன்னியின் செல்வன்” மணிரத்னம் இயக்கிய திரைப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது.

படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி முதல் பாகம் அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் நல்ல வசூலைப் பெற்றது. மணிரத்னம் இதன்பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். “நாயகன்” படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அவர் அந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் பிரபாஸ் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.