“விக்ரம்” திரைப்படம் வெற்றிப் பெற்றதன் மூலம் நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். “இந்தியன் 2” ஷூட்டிங்கை முடித்துள்ள கமல் அடுத்து “கல்கி 2898” திரைப்படத்தில் விலல்னாக நடிக்க 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹெச் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
ஹெச் வினோத் இயக்கும் படத்துக்காக சில பயிற்சிகளை கமல்ஹாசன் மேற்கொண்டு வருகிறார். அத்திரைப்படத்தின் ஷூட்டிங் நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால் இப்போது “இந்தியன் 2” ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதால் இந்த படம் தொடங்குவதில் இன்னும் தாமதம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே கமல்ஹாசன் முதலில் மணிரத்னம் படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு பிரபாஸ் நடிக்கும் “கல்கி” படத்தில் கவனம் செலுத்த உள்ளாராம். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதால் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு கமல் ஹெச் வினோத் படத்தை தொடங்க 2025ம் ஆண்டு ஆகிவிடக்கூடும் என கூறப்படுகிறது.