அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய அரசு கேட்டாலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது என்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையாவின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது. கோடைக்காலம் நெருங்குகின்ற இந்த வேளையில், தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீரை பெற திராணி அற்ற இந்த விடியா அரசின் முதலமைச்சர் தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து, தன்னுடைய கூட்டணி கட்சி முதலமைச்சரைக் கண்டித்து, உரிய சட்ட நடவடிக்கைகளைத் துரிதமாக செயல்படுத்தி தமிழ்நாட்டிற்கான நியாயமான காவிரி நீர்ப் பங்கீட்டினைப் பெற வேண்டும்“ என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.