மார்கெட்டில் இருக்கும் நடிகர்கள் பெரும்பாலும் சொந்தப்படம் எடுப்பதில்லை. ஆனால் விதிவிலக்காக கறுப்புப்பணத்தைக் காப்பாற்ற சந்தானம் சொந்தப்படமெடுப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. தெலுங்கில் வெற்றி பெற்ற ‘மரியாதை ராமன்’ படத்தை தமிழில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற பெயரில் கதாநாயகனாக நடித்து சொந்தமாக தயாரிக்கிறார் சந்தானம். ஸ்ரீநாத் இயக்குகிறார். இதற்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 கோடி ரூபாயில்(?) செட் போடப்பட்டிருக்கிறது. 3 மாதம் வேறு படத்திற்கு கால்ஷீட் இல்லை என்று சந்தானம் மறுத்துவிட்டார்.