தேமுதிக வேட்பாளர் விஜய பிராபகரன் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக அவரது சகோதரர் சண்முக பாண்டியன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி சிவகாசி அருகேயுள்ள அம்மையார்பட்டியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த சண்முக பண்டியன் கிராம மக்களிடம் உருக்கமாக பேசிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் தந்தை விஜயகாந்தை நினைத்து திடீரென கண்கலங்கினார். இதனையடுத்து கிராம மக்கள் சண்முக பாண்டியனுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இச்சம்பவம் அந்த கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.