கல்கி திரைப்பட ரிலீஸ் உரிமையை பெற்ற முன்னணி நிறுவனம்!

Filed under: சினிமா |

“கல்கி” திரைப்படம் கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் கடந்தாண்டு வெளியிடப்பட்டது. படத்தின் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஜூன் 27ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது படத்தின் பிஸ்னஸ் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தைத் தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது. கமல்ஹாசன்தான் படக்குழுவிடம் பரிந்துரை செய்து ரெட் ஜெயண்ட்ஸிடம் படத்தைக் கொடுக்க சொன்னதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.