கடந்த வியாழன் பிரபாஸ் நடிப்பில் “கல்கி 2898 ஏடி” திரைப்படம் வெளியானது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் படம் வசூல் செய்த தொகையை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரது நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான திரைப்படம் ’கல்கி 2898 ஏடி’ இந்த படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. முதல் நாளே இந்த படம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு நாளும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து கொண்டிருந்த நிலையில் நான்கு நாட்களில் இந்த படம் 555 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் ஆயிரம் கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “ஜவான்” உள்பட ஒரு சில இந்திய திரைப்படங்களே ஆயிரம் கோடி வசூல் செய்துள்ள நிலையில் அந்த பட்டியலில் ’கல்கி 2898 ஏடி’ படமும் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.