“கல்கி 2898 ஏடி” ரன்னிங் டைம் எவ்வளவு?

Filed under: சினிமா |

நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கல்கி 2898 ஏடி.”

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. வரும் 27ம் தேதி படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரூபாய் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. படத்தை பார்த்து சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாம். மேலும் படம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் அதாவது 178 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரன்னிங் டைம் உள்ள படம் ரசிகர்களின் பொறுமையை சோதிக்குமா? சுவராசியமாக இருக்குமா? படம் திரையரங்கிற்கு வந்தால் தான் தெரியும்.