கல்வி செயற்பாட்டளரும், கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனராகவும் இருந்து வரும் பத்ரி சேஷாத்ரி முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை அவமதித்து பேசியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அவரை இணையக்கல்வி ஆலோசனை குழுவிலிருந்து தமிழக அரசு நீக்கியுள்ளது.
சமீபத்தில் பத்ரி சேஷாத்ரி அண்ணா குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையானது. இவர் தமிழக அரசின் தமிழ் இணையக்கல்வி ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சர்ச்சை பேச்சை தொடர்ந்து அவரை ஆலோசனை குழுவிலிருந்து தமிழக அரசு நீக்கி மாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி டாக்டர் செந்தில்குமார் “கழக தொண்டர்களுக்கு ஓர் நற்செய்தி. பத்ரி சேஷாத்ரி தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.” என பதிவிட்டுள்ளார். அதை ரீ&டுவிட் செய்துள்ள பத்ரி சேஷாத்ரி “இதுதான் அண்ணாவின் வெற்றியா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.