கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணம் தற்கொலை தான் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து அப்பகுதி மக்கள் பள்ளியை சூறையாடினர். இதனால் பள்ளி சில மாதங்களுக்கு மூடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவர வழக்கில் போலீஸ் சிபிசிஐடி போலீஸ் சார் 1200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் மாணவி கொலை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் தற்கொலைக்கான முகாந்திரம் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.