தற்போது கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 23 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழப்பு என்றும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேர் என இதுவரையில் மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குறித்த தகவல் வெளியான போது 5 பேர்கள் மட்டுமே உயிர் இழந்ததாக கூறப்பட்டது. அதன் பிறகு இன்று அதிகாலை 29 பேர் உயிரிழந்ததாக தெரிய வந்தது. அதன் பின் 30 ஆக சில மணி நேரத்தில் உயர்ந்தது. தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.