கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி?

Filed under: அரசியல்,தமிழகம் |

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து எந்த நடிகரும், சமூக நல ஆர்வலரும் குரல் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த நான்கு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் 14 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களின் வேட்டை தொடங்கிய நிலையில் 1600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. கள்ளச்சாராயம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய போது கள்ளச்சாராய உயிர் இழப்பு குறித்து எந்த நடிகரும் சமூக போராளிகளும் குரல் கொடுக்கவில்லை என்றும் அதிமுக ஆட்சியில் சாராயம் குறித்து பாட்டு பாடுபவர்கள் எல்லாம் இப்போ எங்கே போனார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். திமுக கூட்டணி கட்சிகள் கூட கள்ளச்சாராய உயிர் இழப்பு குறித்து பேசவில்லை என்றும் அவர் கூறினார்.