மாணவன் ஒருவன் மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமிரா வைத்து 2000க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மாணவனொருவன் பெங்களூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவியர் கழிவறையில் ரகசிய கேமரா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை செய்ததில் அதே கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவனின் செல்போனில் கல்லூரி மாணவிகள் கழிவறையில் இருந்த போது எடுக்கப்பட்ட 2000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
மேலும் மாணவர்களின் அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை அதில் உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இதே குற்றத்தில் ஈடுபட்ட அவர் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் போலீசில் கல்லூரி நிர்வாகம் புகாரளிக்கவில்லை. தற்போது மீண்டும் அதே தவறை செய்துள்ளதையடுத்து அந்த மாணவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது குறித்து முழு விசாரணை முடிந்த பின்னர் அந்த மாணவர் மீது எந்த பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்ற தகவல் வெளியாகும்.