கவர்னர் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து விஷச்சாராயம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கிண்டி ராஜபவன் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்தார். சந்திப்பின்போது அவர் விஷ சாராயம் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட ஆளுநரிடம் நேரில் கோரிக்கை விடுத்தார். மேலும் தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குமாறும் அவர் ஆளுநரிடம் பாஜக சார்பில் மனு அளித்துள்ளார். இதையடுத்து ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்