கவிதா ஆவேசம்!

Filed under: அரசியல்,இந்தியா |

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் “இது சிபிஐ கஸ்டடி அல்ல பாஜக கஸ்டடி” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

கவிதா கடந்த மார்ச் 15ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட காவலில் எடுத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின் அவர் டில்லி திகார் திரையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று மீண்டும் அவர் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருடைய காவல் ஏப்ரல் 23ம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது “இது சிபிஐ கஸ்டடி இல்லை, பாஜக கஸ்டடி, பாஜக வெளியில என்ன பேசுகிறதோ அதை சிபிஐல் உள்ளே வந்து கேட்கிறது” என்று கூறினார்.