கவிதா விசாரணை; நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்!

Filed under: அரசியல்,இந்தியா |

ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகளால் தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் கவிதா ஒத்துழைப்பு தரவில்லை என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரிடம் விசாரணை செய்தபோது டில்லி மதுபான கொள்கை முறைகேட்டில் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தர மறுப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. இன்று டில்லி நீதிமன்றத்தில் கவிதா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிபிஐ தரப்பில் இந்த மாதம் முன் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தன்னுடைய கைது சட்ட விரோதம், எனக்கு தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்டதால் தான் நான் பதில் அளிக்கவில்லை, கவிதா தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இவ்வழக்கில் கவிதா தரப்பு வாதம் அடுத்து நடைபெற உள்ளது.