கவின் படத்தின் ஷூட்டிங் நிறுத்த அனிருத் காரணமா?

Filed under: சினிமா |

நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். பின் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் “லிப்ட்” மற்றும் “டாடா” உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதையடுத்து அவர் கவனிக்கப்படும் நடிகராக மாறியுள்ளார்.

கவின், இப்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் விருப்ப நடிகர்களில் ஒருவராகியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் “கிஸ்” என்ற படத்தில் கவின் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தானாம். படத்துக்கான பாடல்களை இன்னும் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறாராம். அதனால் வெளிநாட்டுக்கு சென்று படமாக்கப் படவேண்டிய பாடல் காட்சிகளை இன்னும் படமாக்காமல் இருக்கிறதாம் படக்குழு.