கவுதமிக்கு பாஜக துணையாக நிற்பதாக அண்ணாமலை தகவல்

Filed under: அரசியல்,சினிமா |

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகை கவுதமி கொடுத்த புகார் ஆமை வேகத்தில் தான் போய்க் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

80, 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி. இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இன்று “கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். அக்கட்சியில் இணைந்து 25 ஆண்டுகள் ஆனபோதிலும் அக்கட்சித் தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் அக்கட்சியிலிருந்து விலகுகிறேன்’’ என ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை செய்தியாளர்களிடம், “நடிகை கவுதமி புகாரளித்துள்ள நபருக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அப்படி இருக்கும் நிலையில், கட்சியால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? கவுதமி கட்சியில் தொடர்வது அவரது தனிப்பட்ட உரிமை. கட்சியிலிருந்து விலகினால் அவருக்கு தேவையான உதவியை கட்சி செய்யும். கவுதமிக்கு நியாயம் கிடைக்க பாஜக துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.