டில்லி உயர்நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் கடந்த 2018-19ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக இந்திய தேசிய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்பட காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இதை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இம்மனு வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Related posts:
பாஜக தனது ஆதரவை அறிவித்தது!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேல்முருகன் எம் ...
தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையங்கள் அமைக்கவேண்டும்...
பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் 17 பேர் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்!



