காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும்;- பியூஸ் கோயல்!

Filed under: அரசியல்,இந்தியா |

காங்கிரஸ் எம்.பி., எ.டி.கே.சுரேஷ்குமார் மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் பற்றி நேற்று கருத்துக் கூறிய தனிநாடு கோர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாட்டை பிளவுப்படுத்துவது தொடர்பாக யார் பேசினாலும் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் பொருத்துக் கொள்ள மாட்டோம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாம் ஒன்றுதான் என்று கூறியிருந்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது பேசிய பாஜக எம்.பி., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,டி.கே.சுரேஷ்குமார் தனிநாடு பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.