நடிகர் மன்சூர் அலிகான் ராகுல் காந்தி முன்னிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளார்.
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கினார். சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை மன்சூர் அலிகான் சந்தித்தார். ராகுல் காந்தி முன்னிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து அவர் கடிதம் வழங்கினார். பின் செய்தியாளர்களிடம், “முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். மீண்டும் தாய் கட்சியில் இணைய உள்ளேன். தனது இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியாது” என்று கூறினார். தேர்தல் முடிவுக்கு பின் மன்சூர் அலிகான் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்.