தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது கூட கள்ளச்சாராய மரணம் குறித்த சம்பவம் நடந்தது என சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், “கள்ளச்சாராய விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாதபடி வலுவான சட்டம் உருவாக்க வேண்டும், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். மக்களுக்கு எதிராக ஆட்சி நடத்தியவர்கள் இப்போது மக்களுக்காக பேசுகிறார்கள், அடுத்த தேர்தலில் அவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் தமிழ்நாடு காவல்துறை செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என்று கூறினார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகளின் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை செய்யவுள்ளார். இன்று மாலை காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.