காட்டுயானையின் கதை படமாகிறது!

Filed under: இந்தியா,சினிமா |

கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளாக குலை நடுங்க செய்த காட்டு யானையான அரிக்கொம்பனின் கதையை மலையாளத்தில் திரைப்படமாக எடுக்க உள்ளனர்.

கடந்த 5 ஆண்டு காலமாக கேரளாவில் இடுக்கி மாவட்டத்தின் கேரள மற்றும் தமிழக எல்லை கிராமங்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானை அரிக்கொம்பன் (அரிசி கொம்பன்). சின்னக்கனல், சந்தனபாறை உள்ளிட்ட பல பகுதிகளில் புகுந்து வீடுகளை, விளை நிலங்களை சூறையாடிய அரிக்கொம்பன் இதுவரை 20 பேரை கொன்றுள்ளது. சமீபத்தில் தேனி மாவட்ட வன எல்லைக்குள் புகுந்த அரிக்கொம்பன் ஒரு ரேசன் கடையை துவம்சம் செய்தது. இந்த அரிக்கொம்பன் யானையைன் கதையை மையப்படுத்தி ‘அரிக்கொம்பன்’ என்ற பெயரிலேயே மலையாளத்தில் ஒரு திரைப்படம் எடுக்க இருக்கிறார்கள். சஜித் யாஹியா இயக்கும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இலங்கையில் படப்பிடிப்பை நடத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.