தன் காதலரும் நடிகருமான ஜக்கி பக்னானியைத் முன்னணி நடிகை ரகுல் பீரித்தி சிங் இன்று திருமணம் செய்து கொண்டார்.
ரகுல் பிரீத் சிங் கடந்த 2009ம் ஆண்டு கன்னட திரைப்படமான “கில்லி” மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இவர் “கெரடம்,” “தடையறத் தக்க,” “வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்,” “துருவா,” “ஸ்பைடர்,” “தீரன் அதிகாரம் ஒன்று,” “ரன்வே,” “டாக்டர் ஜி” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரகுல் பிரீத் சிங் தனது காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. ரகுல் பீரித்தி சிங் இன்று தன் காதலரும் நடிகருமான ஜக்கி பக்னானியைத் திருமணம் செய்து கொண்டார். சீக்கிய மற்றும் இந்து முறைப்படி இரு குடும்பத்தினர் முன்னிலையில் சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் பசுமைத் திருமணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து திருமண வரவேற்பில் சினிமா பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.