‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Filed under: சினிமா |

கிருத்திகா உதயநிதி ஜெயம் ரவி நடிக்கும் 33வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்துக்கு பழைய ஹிட் படத்தின் டைட்டிலான ‘காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் நடந்து வருகிறது. அங்கு ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிக்கும் காட்சிகளை இயக்குனர் கிருத்திகா உதயநிதி படமாக்கியுள்ளார்.