இன்று தூத்துக்குடியில் வெட்டிக் கொல்லப்பட்ட காதல் தம்பதியின் உடல்கள் தகனம் செய்யப்பட்டது
கடந்த 3 நாட்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்தில் முருகேசன் நகரில் காதல் திருமணம் செய்த மாரிச் செல்வம் (24), கார்த்திகா (20) ஆகிய இருவரும் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். காதல் திருமணம் செய்துகொண்ட இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மாரிச் செல்வம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்பதால், கார்த்திகாவின் தந்தை உள்ளிட்ட 6 பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் 6 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இன்று காதல் தம்பதியின் உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஒரே இடத்தில் இரு வீட்டாரின் முன்னிலையில் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.