காய்ச்சலுக்கான முன்னெச்சரிக்கையை தெரிவித்த அமைச்சர்!

Filed under: அரசியல்,தமிழகம் |

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஹெச்3என்2 காய்ச்சல் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முன்னெச்சரிக்கை குறித்து அறிவித்துள்ளார்.

ஹெச்3என்2 காய்ச்சல் கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் பரவி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே மத்திய அரசு மருத்துவர்களுக்கு ஹெச்3என்2 வைரஸ் காய்ச்சல் வந்தவர்களுக்கு ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்திருந்தது. இவ்வகையான வைரஸ் காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் வழங்கினால் அதன் பிறகு ஆன்டிபயாட்டிக் தேவைப்படும்போது வேலை செய்யாது என்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுகுறித்து கூறிய போது ஹெச்3என்2 வைரஸ் காய்ச்சல் வந்தவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வீட்டிலேயே மூன்று நாட்கள் இருந்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மூன்று நாட்கள் வீட்டில் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாது என்றும் ஓய்வு எடுப்பதன் மூலம் இந்த காய்ச்சல் சரியாக விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்