‘கார்கி’ டிரெயிலர் ரிலீஸ் தேதி!

Filed under: சினிமா |

“கார்கி” திரைப்படம் வரும் 15ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

இத்திரைப்படத்தில் நடிகை சாய்பல்லவி நடித்துள்ளார். இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த டிரெயிலரில் சில காட்சிகள் ஆரம்பத்தில் ஜாலியாக இருந்தாலும் அதன் பிறகு சீரியசாக ஓடுகிறது. சாய்பால்லவியின் தந்தை திடீரென போலீசால் கைது செய்யப்பட்டு அதன் பிறகு நடக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளது. இத்திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. கோவிந்த் வசந்த் இசையில் உருவாகிய இத்திரைப்படத்தை கவுதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்கியுள்ளார்.