காவிரியில் நீர்வரப்பு அதிகரிப்பு!

Filed under: தமிழகம் |

காவிரியில் நீர்வரப்பு அதிகரித்துள்ளதால் கரையோரமிருக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரியில் நீர்வரப்பு 2.40 லட்சம் கனஅடியாக வர வாய்ப்புள்ளது.

கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளம் கரைபுண்டு ஓடி வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிப்பவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் காவிரியில் 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வர வாய்ப்பிருப்பதாகவும் சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து காவிரி கரையோரம் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நாளுக்கு நாள் காவிரியில் வரும் தண்ணீர் அளவை அதிகரித்து வருவதால் காவிரி கரையோரம் இருக்கும் மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.