தமிழ்நாட்டில் காவிரி கரை ஒரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது. இந்த காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணையிலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சண்டாளர் பெயரை பயன்படுத்தக்கூடாது; அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து மற்றும் பயணிகள் ரயில் ...
2026 சட்டமன்ற தேர்தலுக்கு 12 தொகுதிகளை இப்போதே ஓதுக்கினால் கூட்டணி. யாதவர்களை புறக்கணிக்கிறதா அதிமுக...
சந்திரபாபு நாயுடுவுக்கு ஸ்டாலின் வாழ்த்து!



