காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து; மோடி வாக்குறுதி!

Filed under: அரசியல்,இந்தியா |

பிரதமர் மோடி ஸ்ரீநகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், “காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும். அது மட்டுமின்றி விரைவில் காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும்” வாக்குறுதி அளித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் பிரிக்கப்பட்டது. காஷ்மீரில் சட்டசபை தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து பிரதமர் மோடி சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் தேர்தல் பிரச்சாரத்தில் “புதிய ஜம்மு காஷ்மீரை உருவாக்க நான் மும்முரமாக இருக்க வேண்டும். விரைவில் இங்கே சட்டசபை தேர்தல் நடைபெறும். அதேபோல் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து விரைவில் கிடைக்கும். இதன் மூலம் காஷ்மீர் மக்களின் கனவுகள் நினைவாகும். பல தலைமுறைகளாக பயங்கரவாதம், பிரிவினைவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவை காரணமாக காஷ்மீரில் மக்கள் அச்சமாக இருந்தது. தற்போது அச்சமின்றி மக்கள் நடமாடும் நிலை உள்ளது. அதனால் விரைவில் தேர்தல் நடைபெறும். இங்கு உள்ள வைஷ்ணவா தேவி, அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் இப்போது அச்சம் இல்லாமல் வந்து கொண்டிருக்கின்றனர். பாஜக ஆட்சியில் தான் காஷ்மீர் மக்கள் நிம்மதியாக எந்த விதமான பிரச்சினைகளும் இன்றி இருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.