கிச்சா சுதீப் நடிக்கும் படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான தாணு ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், சூர்யா, விஜய் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.

இப்போது அவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு பேன் இந்தியா திரைப்படத்தை தயாரிக்கிறார். கிச்சா சுதீப்பின் 46வது படமாக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் புரமோஷன் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கி வருகிறார். படத்துக்காக தற்போது மாமல்லபுரத்தில் போலீஸ் ஸ்டேஷன் செட் ஒன்று அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட காட்சிகள் அடுத்து புதுச்சேரியில் நடக்க உள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.