ஆம் ஆத்மி கட்சி மோர்பி சம்பவம் விபத்து அல்ல, கொலை என்று விமர்சித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய ஐந்து நபர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழு தற்போது தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் சம்பவம் விபத்து அல்ல, அது ஒரு கொலை எனவும், அந்த கொலையை செய்தது பாஜக என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கூறியபோது, “பாஜக அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலைதான் மோர்பி பாலம் சம்பவம். இது விபத்து அல்ல” என்று கூறியுள்ளார்.