‘குட் பேட் அக்லி’ ஷூட்டிங் மீண்டும் தொடக்கம்!

Filed under: சினிமா |

பொருளாதார காரணங்களால் நடிகர் அஜீத் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் தாமதமானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அஜீத் நடிக்க ஒப்பந்தமானார்.

இத்திரைப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே தொடங்கி தற்போது ஐதராபாத்தில் சில நாட்கள் நடந்து முடிந்தது. அஜீத் “விடாமுயற்சி” ஷூட்டிங்குக்கு சென்றதால் “குட் பேட் அக்லி” ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 13ம் தேதியோடு “விடாமுயற்சி” ஷூட்டிங் மொத்தமாக முடியவுள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி ஐதராபாத்தில் “குட் பேட் அக்லி” ஷூட்டிங் மீண்டும் தொடங்க உள்ளதாம்.